ரூ1.31 கோடி மதிப்பீட்டில் சிமென்ட்சாலைப் பணிகளுக்குஆ.மணி எம்.பி பூமி பூஜை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பத்து வார்டுகளில் 1.31 கோடி ருபாய் மதிப்பீட்டில் பல்வேறு சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்கும் பணிகளுக்கு ஆ.மணி எம்.பி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பிருந்தா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மல்லிகா ராஜி, திமுக பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரமணி, பாப்பாரப்பட்டி நகர பொறுப்பாளர் பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் திருவேங்கடம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சகாதேவன், பேரூராட்சி கவுன்சிலர் விஸ்வநாதன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.