
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கான சிறப்பு மாற்று வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டிய உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சியானது ஒகேனக்கல் அரசு மீன் பண்ணை பயிற்சி நிலையத்தில் 23 பயனாளிகளுக்கு 13 நாட்கள் பயிற்சி நடைபெற்றது
இப்பயிற்சியின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு சுயத்தொழில் தொடங்கிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது . இந்த பயிற்சியில் மீன்களில் உள்ள உயிர் சத்துக்கள், தாது சத்துக்கள் மற்றும் செய்முறை விளக்கமாக மீன் கட்லெட், மீன் மசாலா கருவாடு, மீன் பஜ்ஜி, மீன் சமோசா, மீன் பர்கர், மீன் ரோல், மீன் ஊறுகாய் ,மீன் வடகம் உள்ளிட்ட செய்முறை விளக்கங்கள் கடந்த 13 நாட்கள் பயிற்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் பயிற்சி முடிவடைந்து நேற்று ஒகேனக்கல் அரசு மீன் பண்ணை நிலையத்தில்
பாரூர் மீன்வள பல்கலைக்கழகம் தொழில்நுட்ப பணியாளர் வானதி மேற்பார்வையில்
இணையதள தேர்வுகள் நடத்தப்பட்டது பின்பு தனித்தனியாக பயிற்சியாளர்களிடம்
மீன்வள பல்கலைக்கழகம் தொழில்நுட்ப பணியாளர் வானதி கேள்விகள் கேட்டார்.
தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பயிற்சிக்கான சான்று பயிற்சி பெற்றவர்களுக்கு பின்வரும் காலங்களில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர் இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட மீன்வள உதவி இயக்குனர் விஜயராகவன்
தலைமையில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு இறுதி கட்ட பயிற்சி முடிவடைந்தன.
இந்த பயிற்சியில் மீன்வள ஆய்வாளர் பிரபாகரன் , கோகிலவாணி, ஒகேனக்கல் சார ஆய்வாளர் திருப்பதி ராஜா, மீன்வள மேற்பார்வையாளர்கள் மகேந்திரன், மீன்வள பாதுகாவலர்கள் ஜீவா, லட்சுமணன் மீன்வள உதவியாளர்கள் சக்திவேல், நவீன் ,அருண் ஜேசுதாஸ் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
