தண்ணீரைத் தேடி அலைந்த யானை குட்டிகள்.தண்ணீரைப் பார்த்தவுடன் ஆனந்தமாக பருகும் காட்சி

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தர்மபுரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது வெயிலின் தாக்கத்தால் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் தண்ணீர் தேடி வனப்பகுதி நடுவே அமைந்துள்ள சாலையை அடிக்கடி கடந்து வருகிறது இந்த நிலையில் யானை குட்டிகள் இரண்டு வெயிலின் தாக்கத்தால் தண்ணீரை தேடி அலைந்து சேர்ந்து கிணறு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தொட்டி அமைக்கப்பட்ட இடத்தில் உள்ள தண்ணீரை அருந்துகின்றன.

சாலைகளில் வன விலங்குகள் குடிநீர் தேடி அலைவதை தடுக்க வனப்பகுதியில் விலங்குகளுக்கு கூடுதலாக தொட்டிகள் அமைத்து குடிநீர் நிரப்பினால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க முடியும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.