
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது இக்கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மேலும் மாணவ மாணவியர்கள் மத்தியில் அவர் கூறியதாவது.. ஒவ்வொரு மாணவரின் கடின உழைப்பும், பெற்றோர்கள் கேஜி கல்வி நிலையத்தின் மீது வைத்த நம்பிக்கையும், மாணவர்களுக்கு இந்த வெற்றியை வழங்கி உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் வித்யா கல்லூரியின் ஆகச்சிறந்த செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கையினை வாசித்தார். பேராசிரியர் முனைவர் வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1339 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதில் 16க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற இளம் பட்டதாரிகள் பட்டங்களை பெற்றுக்கொண்டு சமூகப் பொறுப்புணர்வோடும், உறுதியுடனும் செயல்படுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக தரவரிசையில் 32 மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து 1116 இளங்கலை மாணவர்களுக்கும், 102 முதுகலை மாணவர்களுக்கும், 121 முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை மாணவர்களும், 2 முனைவர் பட்டங்களையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வித்யா, மற்றும் கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா, தேர்வு கட்டுப்பாட்டு துறை நிர்வாக இயக்குனர் கவிதா, கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் குமார் ராஜேந்திரன், மற்றும் மாணவ மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
