
கோவை மாநகராட்சி 1-வது வார்டு மக்கள் சபை கூட்டம் துடியலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி மாநகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள வார்டுகளில் வார்டு மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 1-வது வார்டு மக்கள் சபை கூட்டம் துடியலூரில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி பொறியாளர்கள் ஜெயின்ராஜ், வெங்கடாசலம், சுகாதார மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 1 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தொடர்ந்து நமது பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடிநீர் பிரச்சினை முழுமையாக சரி செய்துள்ளதாகவும், சுகாதார பணிகளையும் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளருக்கு குப்பை சேகரிக்கும் டாட்டா ஏஸ் வாகனம் கூடுதலாக வழங்க வேண்டும். குப்பை சேகரிக்கும் டிப்பர் லாரி கூடுதலாக ஒன்று வழங்க வேண்டும். கொசு மருந்து தெளிக்கும் மிஷின் கூடுதலாக ஒன்று வழங்க வேண்டும். வடிகால் சுத்தம் செய்யும் பணிக்கு கூடுதல் பணியாளர்களை, குறைந்தபட்சம் பத்து நபர்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
