கோவை மாவட்டம் பேரூர் பகுதியில், மள்ளரியப் பேராசான் என்றழைக்கபடும் டாக்டர் குருசாமி சித்தரின் இரண்டாம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திறலானோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மரியாதை செலுத்தினர்,

கோவையில் பிறந்து வளர்ந்த, தமிழ் அறிஞர்களில் ஒருவர் குரு சாமி சித்தர். தேவ நேய பாவாணரை குருவாக கொண்ட இவர், சேர சோழ பாண்டியர்களின் வரலாறு, நீர் மேலாண்மை, சங்க இலக்கியம், மற்றும் மருத பாடல்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வயது மூப்பு காரணமாக உயிழந்தார். மள்ளரியப் பேராசான் என்றழைக்க படும் டாக்டர் குருசாமி சித்தரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். ராஜ தேவேந்திர சுவாமிகள் இந்திராஞ்சலி செலுத்தினார்., அன்னபூரணி குருசாமி சித்தர் வரவேற்ப்புரை வழங்கினார். தொடர்ந்து அனைத்து பொதுமக்களும் இணைந்து டாக்டர் குருசாமி சித்தர் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குருசாமி சித்தர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவரது நினைவு களை எடுத்து கூறினர்
இந்த நிகழ்ச்சியில்
வழக்கறிஞர் விஜயகுமார், ராஜ மணிமாறன், புலியகுளம் முருகராஜ், பனாமா தங்கவேல், பட்டக்காரர் பிரபுகுமார், அவினாசி சேகர், செந்தூர் பாண்டி, தீப முனியப்பன், ஆசிரியர் ஆறுமுகம், பார்த்திபன் பூவை, குனியமுத்தூர் ராமதாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது