
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.ஆர்.ஜி.அருண்குமார் இன்று தொகுதிக்கு உட்பட்ட மருதமலை முருகன் கோவிலில் படிக்கட்டில் ஏறிச்சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.
மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள கடைகளில் நோட்டீஸ் கொடுத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு செலுத்துமாறு கேடுக்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டு ஆட்சிக்கு வந்தது நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
