
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30 அன்று தொடங்கி, ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தும் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நேற்று வரை அறிவித்து வந்தனர், இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரண்டு தினங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை கடந்த 30 ஆம் தேதியில் இருந்து தாக்கல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாநில துணை செயலாளர் தவமணி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு (மாவட்ட உதவி ஆணையர் ஆயம்) அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் மாற்று வேட்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் தவமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது தமிழக வாழ்வுரிமைக் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது மேலும் திமுக தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடாது என்ற எண்ணத்தில் இருந்து வந்ததாகவும் தற்போது தனித்து போட்டியிடுவதால் திமுக பேரதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் பாமகவின் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜி கே மணி மகன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் பென்னாகரம் தொகுதிக்கு சீட்டு வாங்கிக் கொண்டு வருகிறார் அவருக்கு எதிராக ஜிகே மணி பாமக ராமதாஸ் தரப்பிற்கு பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதியில் நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் மேலும் பாட்டாளி மக்கள் கட்சி பிளவு பட்டதற்கு ஜி கே மணி மற்றும் அவரது மகன் தான் என்றும் பென்னாகரம் தொகுதி மக்கள் சார்பாக இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறினார்.
