
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் வீரமலை கிராமத்தை சேர்ந்த இரா.மாதேஷ், தனது தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். “மாற்றத்தின் புதிய முகம்” என்ற முழக்கத்துடன் களமிறங்கும் அவர், விவசாயம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பின்வரும் திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்:
கிருஷ்ணகிரி அணையின் உபரி நீரை கால்வாய்கள் மூலம் ஏரி மற்றும் குளங்களுக்குக் கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்.
தக்காளி, மாம்பழம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உறுதி செய்தல்.
குளிர்சாதன கிடங்குகள் மற்றும் விவசாயப் பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல்.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு:
போச்சம்பள்ளியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அமைத்தல்.
சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் 80% வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுத்தல்.
12-ஆம் வகுப்பில் முதலிடம் பெறும் மாணவர்களின் உயர் கல்விச் செலவை தனது சொந்தச் செலவில் ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு.
அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம்
அனைத்து கிராமங்களுக்கும் தரமான தார்ச் சாலைகள் மற்றும் பேருந்து வசதி.
அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர நவீன மருத்துவச் சேவை.
தூய்மையான குடிநீர் மற்றும் முறையான கழிவுநீர் வடிகால் அமைப்பு.
சமூக நலன்
பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் பயிற்சி அளித்தல்.
பர்கூரில் நவீன பேருந்து நிலையம் அமைத்தல் மற்றும் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானங்கள் உருவாக்குதல்.
மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி குறைகளை நிவர்த்தி செய்தல்.
இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல, இவை அனைத்தும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என வேட்பாளர் இரா. மாதேஷ் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்
