கோவை ராஜவீதி பகுதியில், அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் சேரன், ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் மற்றும் ஜெகநாத் டெக்ஸ்டைல் ஆகியவை இணைந்து கோடை கால வெயிலின் தாக்கத்தை குறைக்க நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ராஜ வீதி பகுதியில் உள்ள, சங்கர மடம் திருமண மண்டபத்தில் கோடை வெயிலை முன்னிட்டு, வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் சேரன், ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் மற்றும் ஜெகநாத் டெக்ஸ்டைல் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நீர் மோர் வழங்கும் விழா நிகழ்ச்சியானது,
இன்று முதல் தொடர்ந்து, 60 நாட்களுக்கு, வழங்க பட உள்ளது. கோடை காலத்தில் பொதுமக்களின் தேவை அறிந்து நீர்மோர் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியினை அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் அமைப்பின் நிறுவனரும், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் தலைவருமான முன்னாள் ஆளுநர் அலை சி.ஜி.வி கணேசன் துவக்கி வைத்தார். இவ்விழாவில், அலையன்ஸ் மாவட்டம் 250எஸ் இரண்டாம் துணை ஆளுநர் அலை எஸ். பிரபாகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் துணைத் தலைவர் முகுந்தன், சங்கர மடத்தின் மேலாளர் வெங்கட்ரமணன், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.