கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது.

ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சாய் சோசியல் சர்விஸ் என்ஜிஓ, சார்பில் கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி, பந்தயசாலையில் உள்ள சாரதாம்பாள் திருக்கோவிலில் நிறைவுற்றது.
இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில், ஊதியம் மற்றும் திட்ட உதவி அலுவலரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியுமான செளந்தர்யா கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து, 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். மேலும், பொதுமக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்த நிகழ்வில், சாய் சோசியல் சர்விஸ் நிறுவனத்தின் நிறுவனர் லயன் டாக்டர் அறிவழகன், தனியார் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம், நிழல் மையம் சார்பில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தினர்.
மேலும், கியர் அப் பைக்கர்ஸ் டிஸ்டினேஷன் குழுவினரும் கலந்து கொண்டு விழிப்புணர்வை பரப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லயன் டாக்டர் அறிவழகன்,
கூறியதாவது…
100 சதவீத வாக்களிப்பு என்பது நம் பொறுப்பும் கடமையும் ஆகும். இதனை அனைவரும் நிறைவேற்ற வேண்டும். வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் மறவாமல் வாக்களித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது