கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில், 5000த்திற்கும் மேற்பட்ட கொளு பொம்மைகளுடன் கூடிய, நவராத்திரி விழா, கண்காட்சியின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை மாவட்டம் கோவைப்புதூர், ப்ரஸ் என்கிளேவ் பகுதியில்,
அசோசியேஷன் ஆப் அலையன்ஸ் க்ளப் இன்டர்நேசனல் மாவட்டம் 250 சார்பாக, அலையன்ஸ் க்ளப் ஆப் சேரன் சங்க தலைவரும், மாவட்ட அமைச்சரவை ஆலோசகருமான, பிரபாகரன் அவரது, இல்லத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கப்பட்டது. இதனை, மாவட்ட ஆளுநர் அலை குணசேகரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 16வது ஆண்டாக துவங்கப்படும் இந்த கொளு பொம்மை கண்காட்சியினை,
அலை சரஸ்வதி தலைமை தாங்க, அலை மஹாலக்ஷ்மி, கீதா, சுபத்ரா, தணம், ஆகியொர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுபத்ரா கூறியதாவது..
கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியில் கொளு பொம்மை கண்காட்சியுடன் நவராத்திரி விழாவை சீறும் சிறப்புமாக நடத்தி வருகின்றோம்.

இந்த ஆண்டு 16வது ஆண்டை முன்னிட்டு, சுமார் 5000த்திற்க்கும் மேற்பட்ட கொளு பொம்மைகளை இங்கு காட்சி படுத்தி உள்ளதாக கூறினார். மேலும் இக்கண்காட்சியில், மஹாபாரத கதைகள், இதிகாச நிகழ்வுகள், தெய்வ வழிபாடுகளின் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பொம்மைகளாக காட்சி படுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்த ஆண்டு கூடுதலாக, சென்னை மெரினா கடற்கரையை பொம்மைகளுடன் காட்சி படுத்தி உள்ளதாகவும் இதில் கடற்கரையில் நாம் கானும், பேல் பூரிகடை, மீன்கடை, கடலை வண்டி, பஞ்சுமிட்டாய் விற்பவர், கடற்கரையில் விளையாடும் குழந்தைகள் என அனைத்தையும் வடிவமைத்து வைக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன், மற்றும் விஜயகுமார், அமைச்சரவை செய்தி தொடர்பாளர் குமார், வட்டார தலைவர் ஜோதி குமார், யுவராஜ், மண்டல தலைவர் மாணிக்கம், யோகி, மற்றும் கீதா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.