
கோவை கணுவாய் பேருந்து நிலையம் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர் ஒன்று திரண்டு கைகளில் கட்சிக் கொடிகளை ஏந்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கோவை கணுவாய் பேருந்து நிலையம் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக அ தி மு க செயலாளர் பன்னீர்மடை செல்வராஜ் தலைமையில், சோமையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கராஜ் முன்னிலையில் கூட்டணிக் கட்சியினர் ஒன்று திரண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இதில் கைகளில் கட்சிக் கொடிகளை ஏந்தி அ தி மு க மாநில பேச்சாளர் கே என் எல் ஓ துரைசாமி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி காலத்தில் கோவை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துகூறியும், பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் பாரதி செல்வம், சிகாமணி, முத்துவேல், சின்னசாமி, சின்னத்தம்பி, எஸ் எம் டி முருகேஷ், கணுவாய் தேவராஜ், கவுன்சிலர் துரைசாமி, ஆர் எஸ் ஆர் செல்வம், ஆறுமுகம், ஆறுச்சாமி, விஸ்வநாதன், ரமேஷ், பாரதிய ஜனதா விறகு கடை கணேஷ் உள்பட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
