
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயது முதியவருக்கு அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் (Microwars AblationMWA) சிகிச்சையை மேற்கொண்டு, நுண்துளை (Minimally Invasive) அறுவை சிகிச்சையின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தி மருத்துவ உலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சிறுநீர் நிறமாற்றம், பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகளுடன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த இராஜபாளையத்தைச் சேர்ந்த 78 வயது மதிக்கத்தக்க முதியவர்க்கு விரிவான மருத்துவப் மேற்கொள்ளப்பட்டு, கணையத் தலைப்பகுதியிலான புற்றுநோய் (Carcinoma of the head of pres இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் குடலியல் சிகிச்சை நிபுணர்களுடன் சிறுநீரகவியல், இருதயவியல், நுரையீரல் நாளமில்லா சுரப்பி மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய பல்துறை மருத்துவக் குழுவினர் முதியவரை முழுமையாக ஆய்வு செய்து, ‘பிலியோ-டைஜெஸ்டிவ் பைபாஸ்’ (ilo Digestive Bypass) சிக்கலான அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சையுடன், கணையக் கட்டியை அழிக்க ‘இன்ட்ரா-ஆப்பரேட்டிவ் மைக்ரோவேவ் அப்லேஷன்’ நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு, மேம்பட்ட அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலுடன் மைக்ரோவேவ் அப்லேஷன்’ (Microwave Ablation) சிகிச்சையை மேற்கொண்ட கதிரியக்க நிபுணர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களின் துல்லியமான மருத்துவத் திறன், கட்டியை மிகச் சரியாகக் குறிவைக்கவும், கட்டியைச் சுற்றியுள்ள முக்கியமான ஆரோக்கியமான திசுக்களை எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாக்கவும் உதவியது இது நோயாளியின் விரைவான குணமடைதலுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியது.
இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இரைப்பை குடலியல், இரைப்பை குடல் புற்றுநோய், கல்லீரல் மாற்று, நுண்துளை மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுசூதனன் கூறுகையில், “கணையக் கட்டிகளை நிர்வகிப்பதில் மைக்ரோவேவ் அப்லேஷன் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது குறைந்த பாதிப்புடன் புற்றுநோய் திசுக்களைத் துல்லியமாக அழிக்க உதவுகிறது. முதியவர்கள் மற்றும் அதிக உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது விரைவான குணமடைதல் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கிறது, என்றார்.
நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் முக்கியப் பங்காற்றிய இரைப்பை குடலியல் நிபுணர்கள் P. ராஜேஷ் பிரபு, C.பிரவீன் குமார் மற்றும் V. S. வெங்கடேஷ், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் அப்துல் காதர் மற்றும் C.ரவீந்திரன் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் C.ஐயப்பன் ஆகியோர் முன்கூட்டியே கண்டறிதல், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டம் மற்றும் விரிவான கண்காணிப்பே இத்தகைய சிக்கலான புற்றுநோய்களைக் குணப்படுத்த அவசியம்,” என வலியுறுத்தினர்.
