
தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர் நலவாரிய சங்கத்தின் சார்பாக, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் கூறுவதாகவும், தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர்கள் நலவாரிய சங்கத்தின் சார்பாக, மாநிலம் முழுவதும் பனைமரம் வளர்ப்பது, மற்றும் பாதுகாப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றதாகவும், தமிழகத்தின் தேசிய மரமான பனை மரத்தை பாதுகாக்கும் பொருட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அமைப்பின் சார்பாகவும், பனைமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலமாக, வாரிய தலைவர் பதவி நியமனம் செய்யும் பட்சத்தில், அந்த வாரிய தலைவர் பதவியை, இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான, மாரியப்பன் ஆகிய எனக்கு, வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும், வாரியத்தின் மாநில தலைவர் பதவி எனக்கு வழங்கினால் எந்தவித பாரபட்சமும் இன்றி, சிறப்பாக செயல்பட்டு தங்களின் வழியில் பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடிதத்தை தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
