ராஜபாளையம்சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு

ராஜபாளையம்
எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி திரு .விவேக் வெள்ளத்துரை அவர்கள் கலந்து கொண்டு உலகத்தில் உள்ள உயிரினங்களில் 20 சதவிகிதம் அறியக்கூடியவை 80 சதவிகிதம் அறியப்படாதவை ,தட்டான்கள் காட்டுப்பகுதியில் வாழக்கூடியவை என்றும் மழைக்காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து நம் நாட்டிற்கு வருவதாகவும் ,3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அவற்றின் அளவு 2 மீட்டர் அளவு இருந்ததாகவும் மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.துணை முதல்வர் முனைவர்.மஞ்சுளா தேவி அவர்கள் தலைமை உரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பாக்கியம் அறிமுக உரையாற்றினார்.மாணவி கனிஷ்கா அஞ்சனை வரவேற்புரையாற்றினார்.மாணவி நந்துஜா நன்றியுரை கூறினார் .