கோவை சாய்பாபாகாலனி பகுதியில் துவங்கப்பட்ட கே.எம்.ஆர்.மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பட்டாசு கடைகளை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.இராமசாமி மற்றும் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி ஆகியோர் திறந்து வைத்தனர்..

தீபாவளி பண்டிகை களை கட்ட துவங்கி உள்ள நிலையில் புதிய பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன..

அதன் படி கோவை சாய்பாபாகாலனி என்.ஆஸ்.ஆர்.
சாலை ஸ்ரீவள்ளி பஸ் ஸ்டாப் அருகே கே.எம்.ஆர்.பட்டாசு உலகம் மற்றும் அதே பகுதியல் மாமு பிரியாணி கடை அருகில் கண்ணன் பட்டாசு உலகம் எனும் இரண்டு பட்டாசு விற்பனை கடைகள் துவங்கப்பட்டன..

முன்னதாக கே.எம்.ஆர்.பட்டாசு கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.எம்.இராமசாமி,மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்..

இந்நிகழ்ச்சியில் சாய்பாபா காலனி தி.மு.க. பகுதி கழக செயலாளர் கே.எம்.ரவி,மாமன்ற உறுப்பினர்
பேபி சுதா ரவி,பூபேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

இதே போல மாமு பிரியாணி அருகில் துவங்கப்பட்டுள்ள கண்ணன் பட்டாசு கடை திறப்பு விழாவில் முதல் விற்பனையை எம்.எம்.இராமசாமி துவக்கி வைக்க சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி பெற்று கொண்டார்..

இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் கண்ணன்,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள் அபுதாகீர்,ராதாகிருஷ்ணன்,அபு ஆகியோர் கலந்து கொண்டனர்..

புதிதாக துவங்கப்பட்டுள ள இரண்டு பட்டாசுகடைகளிலும் 80 சதவீத தள்ளுபடியுடன் நல்ல தரமான சிவகாசி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்..