எோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சி, இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டி பகுதியில், கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வித்யா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா தொடக்க உரை நிகழ்த்தினார். மேலும் கேஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவச்சலம் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் காயத்ரி பாலகோகுலவர்தன் மற்றும் அபிநயா ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் தங்களின் கல்லூரி அனுபவங்களையும் தங்களுக்கு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அவர்களை வாழ்வின் உயர்வுக்கு கொண்டு செல்ல எவ்வாறு உதவுகிறது என்பதையும் எடுத்துக் கூறினார்கள் இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் பேசும்போது சுய முயற்சி தன்னம்பிக்கை தனித்திறன் மேம்படுத்துதல் மற்றும் சிறந்த வழிகாட்டுதலை பெறுதல் ஆகியவற்றின் மூலம் எவ்வாறு இலக்குகளை அடைய முடியும் என்று மாணவ மாணவிகளுக்கும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கே ஜி கல்வி குழுமத்தின் வருங்கால முன்னெடுப்புக்குக்கான இயக்குனர் அத்விக் கோவிந்த் அசோக் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளில் பயிலவிருக்கும் 1500 க்கும் மேற்பட்ட புதிய மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.