குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.
12.6.2026,கூடலூர் அருகே உள்ள மலைவாழ் மக்கள் வாழும் பளியங்குடியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அன்பு அறம் செய் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ராதேவி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு புறத் தொடர்பு பணியாளர் பிரேமா குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் நலனுக்கான நன்மைகளை எடுத்து கூறினார்.
அதைத் தொடர்ந்து அன்பு அறம் செய் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவாக மாணவர்களுக்கு நோட்டு,பேனா, பென்சில்,வாய்ப்பாடு, எழுதும் அட்டை மாணவர்களின் நலனுக்காக வழங்கப்பட்டது, பள்ளி வளாகத்தில் சீதாப்பழ மரக்கன்று நடவு செய்யப்பட்டது.பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கோகிலா முருகேசன், ஆசிரியர் முருகேசன், ஆசிரியர் பாண்டி, சிந்துஜா, அன்னமாரிலட்சுமி,நவநீதிசஞ்ஜீவி,வேல்சரண் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு அன்பு அறம் செய் அறக்கட்டளை நிறுவனர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா செய்திருந்தார்.