தொடர்ந்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கம்! ஒரு திட்டத்தை தயாரித்து அதனை பின்பற்ற உத்தரவிட வேண்டும்! தொடர் அபராதம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என்று போன்ற பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு விடுத்த கோவை மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம்!!!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் நீலாம்பூர் அடுத்த, பட்டணம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்த்து புதிய தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக கண்ணன் என்கிற கருப்புசாமி, பொருளாளராக கங்காதரன் ஆகியோர் தேர்வு செய்யபட்டு அவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று கொண்டனர். தொடர்த்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சந்தித்து வரும் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இச்சங்கத்தின் புதிய தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது..
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வாயிலாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இன்னல்கள் இடையூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவை மாவட்ட மானது கட்டுமான பொருட்கள் அதிகமாக விற்பனை செய்ய படும் பகுதியாக உள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக இத்துறையின் வளர்ச்சி என்பது கோவையில் தான் நடைபெற்று வருகின்றது. இங்கு இத்தொழிலை நம்பி சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். மறைமுகமாக சுமார் 5000த்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இத்துறையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக பல்வேறு துறைகளில் இருந்து டிப்பர் லாரிகளுக்கு அபராதங்கள் விதிக்க பட்டு வருகிறது குறிப்பாக, போக்குவரத்து துறை, காவல்துறை, கணிமவளத்துறை, உள்ளிட்ட துறைகளின் முலமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டு, பல டிப்பர் லாரி உரிமையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்ட விரோத செயல்களில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதில்லை, ஆனாலும் இந்த அரசு தொடர்ந்து இவர்களை வஞ்சித்து வருகின்றது. அனைத்து துறையினரும் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தி, டிப்பர் லாரி இந்த வகை எடைகளை மட்டும் கொண்டு வர வேண்டும், இந்தந்த பகுதிகளில் இந்தந்த விதிமுறைகள் உள்ளது இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெளிவு படுத்த வேண்டும். என்ற திட்ட கோட்பாடுகள் நமக்கு அரசு இன்னும் வழங்கவில்லை இதனை முதலில் அரசு செய்து தர வேண்டும் இன்னும் இது போன்ற பல்வேறு இடையூறுகளை இச்சங்கத்தினர் சந்தித்து வருகின்றனர் அவற்றை எல்லாம் தீர்மானமாக எழுதி அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.