திருப்பத்தூரில் நகராட்சியால் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படாததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட VCK தெரு, பொன்னேரி தெரு அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வந்ததால் துர்நாற்றம் விசிய நிலையில் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தால் கழிவு நீர் கால்வாயை மறுசீரமைக்க கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டது.

இந்த நாள் வரையிலும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியே திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் வரவேண்டும் கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி நகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நாளையிலிருந்து 10 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த கழிவுநீர் கால்வாயால் 50க்கும் மேற்பட்டோருக்கு கை மற்றும் கால்களில் அடிபட்டுள்ளது என பொதுமக்கள் முறையிட்டனர்.

மேலும் அப்பகுதி சேர்ந்த பெண்மணி ஒருவர் நகராட்சி ஆணையாளர் சாந்தியிடம் மழை வரும்பொழுது கால்வாய் எது ரோடு எதுவுமே எங்களுக்கு தெரியல.

அதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையாளர் நான் புதுசா வந்திருக்கேன் என நகராட்சி ஆணையாளர் பேசியது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது…