போச்சம்பள்ளி அருகே உள்ள வலசகவுண்டனூர் ஊராட்சி விக்கினம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சென்னம்மாள் கோவில் கும்பாபிஷேக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவேல் தலைமையில் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வலசைகவுண்டனூர் விக்கினம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சென்னம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாகவும் பக்தி சிரத்தையுடனும் நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே கோவிலில் பல்வேறு ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதன் முக்கிய நிகழ்வாக, இன்று காலை மகா கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக யாகசாலையில் பிரம்மாண்ட வேள்வி பூஜைகள் தொடங்கின. வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்களின் பக்திப் பாடல்களுடன் வேள்வியில் பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்தனர். பின்னர், கோபுர கலசத்திற்குச் சென்று வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி வலசைகவுண்டனூர் விக்கினம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன், கூடிருந்த பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு, மூலவர் சென்னம்மாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவேல்,ஊர் நாட்டார் ராமமூர்த்தி, ஊர் கவுண்டர் சபாபதி, கூச்சிகல்லூர் ஊர் கவுண்டர் கதிரவன், விக்கினம்பட்டி பொறுப்பாளர்கள் மாரியப்பன், முருகன் நிர்வாகிகள் இவ்விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.