
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில், கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் இச்சங்கத்தினர்,
எரிபொருள் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஜிபிஎஸ் கருவி, எப்சி, இன்சூரன்ஸ் விலை உயர்வு, மற்றும் சாலை வரி உயர்வை கண்டித்தும், இனி எங்களது லாரிகளில், அதிக எடை ஏற்ற மாட்டோம், ஜிஎஸ்டி பில் இல்லாமல் வாகனங்களை இயக்க மாட்டோம், பாதுகாப்பான மற்றும் சட்டப்படி லாரி போக்குவரத்தை உறுதி செய்வோம் என்று கோரிக்கை வைத்துள்ளனர், மேலும் இந்த போராட்டத்திற்கு அனைத்து செங்கல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இச்சங்க நிர்வாகிகளான எஸ்பிஎம். தமிழ், பரசுராமன், டிகேஎஸ் தங்கராஜ், மோகன்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக, இன்று முதல் வரும், 8ம் தேதி வரை, மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளோம்.
இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரிகள், கோவை மாவட்டத்தில் மட்டும் வேலை நிறுத்தம் செய்துள்ளது.
இதனால் ஒரு நாளைக்கு 20 லட்சம் வரை, இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்
இந்த தொழிலை நம்பி, உள்ள சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எங்களது போராட்டம் காரணமாக, கட்டுமான துறைக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்களும் விலை ஏறும் நிலை ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும்
இந்த போராட்டம் நடத்த முக்கிய காரணமே, அதிக எடையுடன் செங்கல்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு அதிக அளவில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். ஆர் டி ஒ அதிகாரிகள் லாரிகளை சிறை பிடிக்கின்றனர் இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்க படுகின்றனர். இதனால் அரசு நிர்ணயித்த எடையின் அளவில் லாரிகளை இயக்க உள்ளதாகவும், ஜிஎஸ்டி பில் இல்லாமல் செங்கல்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து செங்கல்களை வாங்க மாட்டோம் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஆர்எஸ்ஆர் செல்வராஜ், எஸ்விகே தமிழரசன், ஆர்பிடி உதயா, சம்பத், தினேஷ், ராஜேஷ், ரமேஷ்,எஸ்எம்டி சுரேஷ், வெள்ளைசாமி, எஸ்கேகே ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
