பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, ஓபிசி மக்கள் உரிமை கட்சி இணைந்து நடத்தும், மாபேரும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 32 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பட்டது..

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, ஓபிசி மக்கள் உரிமை கட்சி இணைந்து நடத்தும், மாபேரும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 4வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில்,
தமிழகத்தில் உள்ள, கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறுகளில் இருந்து,
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார்
32 மாணவ மாணவியர்களுக்கு, தலா 30 ஆயிரம் காசோலையாக வழங்கப்பட்டது.
12வது பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதை தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு இக்கல்வி ஊக்கத்தொகை வழங்க பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
ரூட்ஸ் குழுமங்களின் தலைவர்
ராமசாமி,கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கினார். ஒபிசி கூட்டமைப்பின் தலைவர் இரத்தின சபாபதி, தலைமை தாங்கி மாணவ மாணவியர்கள் மத்தியில் கூறியதாவது.
நமது அமைப்பின் சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, சிறந்த கல்வி நிறுவனங்களின் முழு விவரங்கள், எந்த நிறுவனத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம், என்ற வழிகாட்டுதல்களையும், நாடெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களில் சிறந்த பட்டப் படிப்புகள், உயர் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை மாணவ மாணவியர்களுக்கு வழங்க நமது அமைப்பு சார்பில் வழிகாட்ட பட்டு வருகிறது. எந்த கல்வி நிறுவனங்களில் பயில எங்கிருந்து நிதி பெறுவது? படிப்பு முடித்த பின் எந்தெந்த படிப்புக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறதாக தெரிவித்தார் இதனை மாணவ மாணவியர்கள் அறிந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்த பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் துணை செயலாளர் திருஞானசம்பந்தம், துணைத்தலைவர் வெள்ளியங்கிரி
வெஸ்ட்டா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சேரலாதன் இராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.