
கோவை வடவள்ளியில், பாரத் இண்டஸ்ட்ரீஸ் அன்ட் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் சார்பாக, பாரத் சிட்டி007 என்ற பிரிமியம் வில்லா, மற்றும் வீட்டுமனைகள் அறிமுக விழா நடைபெற்றது. வடவள்ளி சிறுவாணிசாலை, பொங்காளியூர், பகுதியில் இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில், இந்திய திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான சத்யராஜ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், வீட்டுமனைகளை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில், சமூக மற்றும் தொழில்துறை சார்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சத்யராஜ், மற்றும் பாரத் இன்டர்ஸ்டிஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான லயன் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம், கூறியதாவது.. தொலைநோக்குப் பார்வையில் இந்த பாரத் சிட்டி உருவாகியுள்ளது எனவும், எளிய பின்னணியில், இருந்து வந்து, இன்று பல துறைகளில் பறந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி, தொழிலதிபராக தான் திகழ்ந்து வருவதாகவும், தனது வெற்றிப் பயணம், இளம் தலைமுறைக்கு ஊக்கமாக அமைவதாக தெரிவித்தார். உற்பத்திதுறை, ரியல் எஸ்டேட், மற்றும் முதலீடுகள் என 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தனது தொழில்முறையூத்தி, நேர்மை, மற்றும் திறமையான நிதி மேலாண்மை, மாறாத உறுதியையும், தன்னம்பிக்கையையும், மாறா அற்பணிப்பையும் கொண்டதாக தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாரத் சிட்டி, 9.44 ஏக்கர் பரப்பளவில், 189 வில்லா மலைகளைக் கொண்ட ஒரு பிரீமியம் வில்லா, எனவும், இந்த திட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பிலான சென்ட்ரல் பார்க், தியானம் செய்வதற்கான பிரத்தியாக பகுதி, நீரூற்று, நடைபயிற்சி பாதை, கால்பந்து விளையாட்டு பகுதி, வெளிப்புற உடற்பயிற்சி கூடம், பிக்கில் பால் கோர்ட், டெம்பிள் கார்டன், மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, உட்பட 20க்கும் மேற்பட்ட லைஃப் ஸ்டைல் வசதிகள் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அரசின் டிடிசிபி, அங்கீகாரம் மற்றும் ரே ரா பதிவு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது எனவும், முன்னணி வங்கிகள் 70 முதல் 90 வரையிலான வங்கி கடனுதவிகளும் வழங்குவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாரத் இன்டஸ்ட்ரீஸ் அண்ட் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் இயக்குனர் அரவிந்த் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
