
கோவை பீளமேடு பகுதியில், பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009ம் ஆண்டு துவங்க பட்ட இந்த பள்ளியானது, எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகின்றது, இங்கு சுமார், 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மாணவர்களுக்கு உலக அரசியலும் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், 4ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் முதல், 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் வரை வாக்குகள் செலுத்தினர். தொடர்ந்து இந்த தேர்தல் குறித்து பள்ளியின் செயலர் நந்த கோபாலன், மற்றும் பள்ளியின் முதல்வர் காயத்ரி, ஆகியோர் கூறியதாவது..
பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு கற்றல் திறன் மட்டுமன்றி, உலக அரசியலையும் தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், மாணவர் தலைமைப் பொறுப்பாளர்களுக்கான தேர்தலாக
நடைபெற்றது. மாணவர்களிடையே ஜனநாயக விழிப்புணர்வையும், தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கில் மாணவர் தலைமைப் பொறுப்பாளர்களுக்கான
தேர்தலாக நடைபெற்றது.
இத்தேர்தலில் பள்ளி மாணவர் தலைவர், துணை மாணவர் தலைவர், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர், ஒழுக்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முறையில் நடைபெற்றது.
மாணவர்கள் ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாகவும் ஒழுங்காகவும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மாணவர்களிடையே தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் நல்ல குடிமைப் பண்புகளை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று தெரிவித்தார். மேலும் தற்போது பதிவாகியுள்ள வாக்கு பதிவுகள் வரும் திங்கள்கிழமை எண்ணப்பட்டு தற்பொழுது நடைபெற்ற பொறுப்புகளுக்கான பதவிகளில் மாணவர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு முதல் 9ம் வகுப்பு, மற்றும் 10ம் வகுப்புகளுக்கான சேர்க்கைகளும் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.
