இந்தியர்களை விட, மேலை நாட்டுமக்கள் 70 வயதுக்கு மேல் நோய் நொடியின்றி வாழ யோகாசனம் மிகபெரிய வரப்பிரசாதமாக உள்ளது! ஆனால் இந்தியர்கள் உடல் உழைப்பு இன்றி 30 வயயில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகுவதாக, கோவையை சேர்ந்த யோகா மாஸ்டர் சத்ரபதி தெரிவித்துள்ளார்.

தமிழகவெற்றிக்கழக தலைமையிலான அரசு, ஊழல் அற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, ஆயினும் இதனை தடுக்க ஏற்படும் தடைகள் நீங்க வேண்டியும் தனி மனித ஒழுக்கத்தை உலகில் உள்ள அனைவருமே கடைபிடிக்க வேண்டும் எனவும்,
உலக நன்மை, போரற்ற உலகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ந்து 11 நாட்கள், அனாசன உபவாச தியானம் எனும் தலைப்பில் யோகாசனங்கள் செய்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த யோகா மாஸ்டர் சத்ரபதி. இவர் தனது 8 வயதில் கற்று கொண்ட இந்த யோகா பயிற்சிகளை முழுமையாக கற்று கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக, யுனிவர்ஸல் யோகா சென்டர் என்ற பெயரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் முதல், திரைத்துறை பிரபலங்கள் வரை யோகா, பயிற்சிகளை அளித்து வருகின்றார். இந்த நிலையில் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து
கோவை பீளமேடு புதூர் மாரியம்மன் கோயில் திடலில்,
காலை முதல் மாலை வரை தொடர் யோகாசனங்களை செய்து வருகின்றார். 11வது இறுதி நாளான இன்று, இந்த சாதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய யோகா மாஸ்டர் சத்ரபதி கூறியதாவது… தமிழக முதல்வர் விஜய்க்கு அவர், சினிமாவில் நடிக்கும் முன்பே கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ்,யோகா,சிலம்பம், ஸ்கேட்டிங், சினிமா சண்டைபயிற்சி போன்ற பயிற்சி வழங்கி உள்ளேன். முதல்வரின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோரும் தன்னிடம் யோகா பயிற்சிகளை பெற்றுள்ளனர். மேலும் இதனை பல்வேறு பிரபல தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் தனது பேட்டிகள் ஒளிபரப்பாகி பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன்.
திரைத்துறையில் குறிப்பாக முன்னனி நட்சத்திரங்களான சூர்யா, சிலம்பரசன், குஷ்பு என பலருக்கும், யோகா பயிற்சிகளை வழங்கி உள்ளேன் இதற்காக இந்திய நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பலதரப்பட்ட மக்களக்கும், இந்த பயிற்சிகளை அளித்து உள்ளேன்
அந்த வகையில், இந்த வகை பயிற்சிகளை, மேலை நாடுகளான அமெரிக்கன், பிரிட்டிஷ், கான்சுலேட்ஸ், போன்ற பலருக்கும் யோகா கற்று கொடுத்துள்ளேன். பெரும்பாலும் இந்தியர்களை விட, வெளிநாட்டினர் யோகா பயிற்சிகளை கற்று கொள்ள அதிக அளவில் ஈடுபாடு காட்டுகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் 70 வயதிற்க்கு மேலும் நல்ல திட காத்திரமான நிலையில் உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலருக்கும் 30 வயதுக்குள் உடல் உழைப்பு இன்றி சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இதய நோய், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொள்ளும் நிலை ஏடுபடுகின்றது என்றார். யோகாசனம் செய்யதால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மனதளவிலுல் இளமையாக இருக்கலாம் என்றார், எனவே அனைவரும் யோகா கற்று கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.