
பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட, உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை, போர்டுகள், இந்தியாவிலேயே முதன்முறையாக லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி ஐப் பயன்படுத்தி, பல நிலையான கட்டுமானத் தீர்வுககளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம், தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட இந்த போர்டுகள் உதவும்.
350 கோடி முதலீட்டில், ரெனாகான், ஆந்திரப் பிரதேசத்தின் நாயுடுப்பேட்டையில் ஏ.ஏ.சி பிளாக்ஸ் ரேபிட் வால் பேனல்ஸ் மற்றும் ஃபைபர் சிமெண்ட் போர்டு ஆகியவற்றின் உற்பத்திக்காக உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது. வெறும் 12 மாதங்களில் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, உலகளவில் அளவுகோலாகக் கருதப்படும் லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி யை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி, நவீன கட்டுமானத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய துல்லிய-பொறியியல் வடிவமைப்பைக் கொண்ட நிலையான கட்டுமானப் பொருட்களை வழங்குகிறது.
இது குறித்து ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் செல்வசுந்தரம் கூறியதாவது. “கோவையில் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் அறிமுகமாவது, முழுமையான கட்டுமானத் தீர்வுகள் வழங்குநராக மாறும் ரெனாகானின் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் மையங்களில் ஒன்றாகிய கோவை, நவீன மற்றும் நிலையான கட்டுமான முறைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது. எங்களின் முதன்மை குடியிருப்புத் திட்டமான ‘வரம்’ மூலம் ஏற்கனவே கோயம்புத்தூரில் வலுவான இருப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
