கோவை மருதமலை அடிவார பகுதியில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில் 10 ம் ஆண்டு, நவராத்திரி விழாவை ஒட்டி, 1000க்கும் மேற்பட்ட கொளு பொம்மைகளுடன், விநாயகர் கிரிக்கேட் ஆடும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மருதமலை அடிவாரத்தில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது . இத்திருக்கோவில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு, கொளு உற்சவ விழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக 10 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மூன்றாவது நாளான இன்று, சிறப்பு நடன நிகழ்ச்சிகளுடன், கொளு பொம்மைகள் கண்காட்சியும் நடைபெற்றது
இக்கண்காட்சியில், சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்ட, பொம்மைகள் காட்சிபடுத்த பட்டுள்ளது. பாராலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா அமைப்பின் துணைத் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் முன்னிலை வகித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வள்ளியம்மன் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் அன்பு என்கின்ற செந்தில் பிரபு செய்திருந்தார். இந்த கொளு, கண்காட்சியில் வைக்கப்பட்ட நவக்கிரக ஸ்தலம், கல்யாண விருந்து, மணமக்கள் வீதி உலா, மக்களின் இயல்பான வாழ்க்கை,, விவசாயக்காலம், செழிப்பான கிராமங்கள், ஜல்லிக்கட்டு, குதிரை ஆட்டம், கரகாட்டம், கிருஷ்ண லீலா, ஐயப்பன் மலை, பதினெட்டாம்படி ஐயப்பன் பஜனை, கும்பகோணம் மரப்பாச்சி பொம்மைகள், 15 வகையான சித்தர்கள் பெண்மகள், ருது சீர்படலம், திருக்கோவில் பூஜை, மற்றும் தரிசன காலம், கல்யாண காட்சி, திருவிளக்கு பூஜை, சிறுவர் பூங்கா, திருக்கைலாயம், திருமலை வெங்கடேச பெருமாள் தரிசனம், ஆஞ்சநேயர் உற்சவம், சஞ்சீவி மலை, என பல்வேறு கொளு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்திர சபையில் கிரிக்கெட் விளையாடும் விநாயகர் பொம்மைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. நவராத்திரி உற்ச விழாவை முன்னிட்டு சுமார் பத்து நாட்களும் இங்கு சிறப்பு வழிபாடுகள், சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகளுடன், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. விழாவின் இறுதியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் இரவு உணவுடன் ஒவ்வொரு நாள் விழாவும் நிறைவு பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.