
கோவை சாய்பாபா காலனி சேர்ந்த அக்ஷை ஷர்மா கடந்த 2013-ம் ஆண்டு மின் பொறியியல் முடித்துவிட்டு மின் பொறியிகளாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.அவரது தந்தை மனோஜ் சர்மா கடந்த 10 வருடங்களாக நோயிற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அக்ஷை சர்மாவிற்கு புத்தகம் எழுதுவது,இசையமைப்பாளர் ஆவது உள்ளிட்ட கனவுகள் ஏற்பட்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மின் பொறியாளராக வேலை பார்த்த நிறுவனத்தை விட்டு வெளியேறி புத்தகங்களை எழுத தொடங்கி உள்ளார்.
அதன் பிறகு 2018-ம் ஆண்டு “Flying Dreams” என்ற புத்தகத்தை எழுதி நிலையில் தேசிய அளவில் இடம் பெற்று பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன்,கேஜிஎப் படத்தின் நடிகர் யாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அவரை அழைத்து பாராட்டினர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதி வந்த நிலையில் அக்ஷை சர்மாவிற்கு 2023-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த பத்து தலை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு “Bhai Sleepercell” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து A Writer on a Mission (The Rise of Astraavan) என்ற ஆங்கில புத்தகத்தை 2024-ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய நிலையில் 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தகத்தை எழுதி நிறைவு செய்தார்.
அந்தப் புத்தகத்தில் வரும் கதைகளை 90 நிமிடம் வீடியோவாக பதிவு செய்து “ஆஸ்கார் விருது-க்கு” கடந்த செப்டம்பர் மாதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்திருந்தார்.இந்தக் கதையில் பெண்ணை உளவாளியாக மையமாக வைத்து ஏழு நாடுகளில் நடக்கும் ரகசியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த கதையில் முக்கியமாக “AIRCRAFT” ஊழல் குறித்து விரிவாக்கப்பட்டுள்ளது.
இந்த கதையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடங்கி டெல்லி,லண்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் வழியாக சென்று இறுதியாக இலங்கையில் இந்த கதை நிறைவடையும் என்று அக்ஷை சர்மா தெரிவித்துள்ளார்.
பின்னர் கடந்து சில நாட்களுக்கு முன்பு அந்தக் கதையை A Writer on a Mission (The Rise of Astraavan) பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்வதாக அக்ஷை சர்மாவிற்கு இணையதளம் வாயிலாக தகவல் வந்துள்ளது.
ஆஸ்கார் விருதுக்காக காத்திருக்கும் அக்ஷை சர்மா இந்த கதை குறித்து விரைவில் பெரிய அளவில் படம் தயாரித்து வெளியிடப் போவதாகவும் இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது என கூறினார்.
இந்தியாவில் குறிப்பிட்ட பேர் ஆஸ்கார் விருது-திற்கு பதிவு செய்த நிலையில் தனது பதிவை ஆஸ்கர் விருது எடுத்துக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விரைவில் தனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
