
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற, ஐஎன்எஸ்டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 75 கிளைகளுடன், பல்வேறு ஆடை வடிவமைப்பு துறை மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகின்றது. இந்த நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு, கோவை பீளமேடு பகுதியில், துவங்கபட்டு, 3 ஆண்டுகளாக செயல் பட்டு வருவதுடன் இதுவரையிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பு துறை, மாணவ மாணவியர்கள், வீடு மற்றும், அலுவலக உட்கட்டமைப்பு துறையில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செயல்முறை பயிற்சிகளையும் பயிற்சி, வகுப்புகளையும் கற்று, தருவதுடன், அவர்களின் திறன்களை அறிந்து சான்றிதழ்களும் வழங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இங்கு ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள்கட்டமைப்பு துறையில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, கூடுதல் பயிற்சி வகுப்புகளாக,
பேஷன் டிசைன் பயிற்சிகள், ஜூவல்லரி மேக்கிங், அனிமேஷன் பயிற்சிகள், க்ராபிக்ஸ் டிசைன் பயிற்சிகள்,
இஞ்சினியரிங் டிசைன் பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும் ஆண்டு தோறும், மாணவ மாணவியர்களை ஊக்கு விக்கும் வகையில், இந்த வருடாந்திர ஆண்டு விழா கொண்டாடபடுவதுடன், கடந்த ஆண்டுகளில் சிறந்த டிசைனர்களையும் வாழ்த்தி பெருமை படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஐ.என்.எஸ்.டி. இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரனவ் ராஜ் அகர்வால், மற்றும் கோவை மையத்தின்
இயக்குநர் தேவேந்திரன், ஆகியோர் கூறியதாவது..
கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனம் செயல்பட்டு வருகின்றதாகவும், இங்கு மாணவ மாணவியர்களுக்கு ஆடை வடிவமைப்பு துறை, வீடு மற்றும் அலுவலக உள்கட்டமைப்பு துறைகளில் உள்ள பல்வேறு சிக்கல்களை அகற்றுவது எவ்வாறு? என செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளிக்க பட்டு வருகின்றது.
தற்போது பயிற்சி மையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில் திறன் பயிற்சி வகுப்புகளை பயின்று வருகிகின்றர். கூடுதலாக இங்கு டிப்ளமா, மாஸ்டர் டிப்ளமோ, பயிற்சிகளும், ஆட்டோ டெஸ்க் 3டி மேக்ஸ் என்ற, சான்றிதல் வகுப்புகளும் அளிக்க பட்டு வருகின்றதாக
தெரிவித்தார்.

அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026 எனும் தலைப்பில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
மாணவர்களின் திறன்களை வேளிபடுத்தும் நோக்கமாக அமைந்ததாக கூறினார். இங்கு ஆடை வடிவமைப்பு துறை மற்றும் வீடு அலுவலக வடிவமைப்பு துறை, மாணவ மாணவியர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள, முண்ணனி டிசைனிங் கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளும் கிடைக்க உதவும் என்றனர். மேலும் மாணவ மாணவியர்கள் இத்துறையில் பயிற்சி பெற்று சுய தொழில் துவங்குவது எப்படி? ஜிஎஸ்டி எடுப்பது எப்படி? நிறுவனத்தை பதிவு செய்பவது எப்படி, என்பது குறித்தும் விளக்கம் தருவதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
