திருப்பத்தூரில் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் சட்டவிரோதமாக கரு கலைப்பு செய்து வந்த கணவன் மனைவி கைது! கிளினிக் சீல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் அவருடைய மனைவி சுமங்கலி இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்தக் கிளினிக்கில் சட்ட விரோதமாக கரு கலைப்பு நடைபெறுவதாக திருப்பத்தூர் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணகி அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு மனைவி ஆர்த்தி என்பவருக்கு கரு கலைப்பு செய்ய பிறப்புறுப்பில் மாத்திரை வைத்ததை சுமங்கலி ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக கரு கலைப்பு செய்தது உறுதியானதன் காரணமாக திருப்பத்தூர் நகர போலீசாரிடம் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்களுக்கு சட்டவிரோதமாக கரு கலைப்பு செய்து வந்த சுமங்கலி மற்றும் அவருடைய கணவர் சுதாகர் ஆகிய இருவரையும் கைது செய்து கிளீனிக்குக்கு சீல் வைத்தனர்.

மேலும் உடன் இணை இயக்குனரின் உதவியாளர் சுந்தரமூர்த்தி, வெங்கடேசன், மருந்தாளுனர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.