ஒரு வார காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் கிராமத்தில் செங்கோடம்பாளையம் வட்டமலை பாளையம் முதலிபாளையம் பெருமாள் பாளையம் கருக்கம்பாளையம் அப்பியபாளையம் சமத்துவபுரம் சுற்றுவட்டாரம் 10 கிராமங்களில் பாளையம் தாயம் பாளையம் செம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்து ஒரு வார காலத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை கடித்து குதறிய வெறி நாய்களால் லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஊதியூர் ஈரோடு செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது
அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அனைத்து கிராம மக்களின் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் சாலை மறியல் செய்யப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்