திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று (19.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி நிறைகுறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும் தமிழ்நாடு அரசாங்கத்தால் 153 ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக 53 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அடையாள அட்டையை வழங்கினார்.
இவ்விழாவில் ஆயுதப்படை ஆய்வாளர் திரு.கணேஷ் பாபு, உதவி ஆய்வாளர், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை சரக துணை தலைவர் திரு.சுரேஷ், மண்டல தளபதி திரு.வெங்கடேசன், மண்டல துணை தளபதி திரு.சத்திய பாலாஜி மற்றும் அனைத்து ஊர் காவல் படையினர் கலந்து கொண்டனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
