பொம்மிகுப்பம் கிராமத்தில் இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி!


திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் அடுத்த பழத்தோட்டம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்துறை சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, கரும்பு சாகுபடி உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் தோட்டக்கலைத் துறை சார்ந்த செடி வகைகள் விவசாயம் செய்வது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் திருப்பத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் சொஸ்தி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர். வெற்றி, உதவி வேளாண் அலுவலர் தனஜெயன், உதவி தோட்டக்கலை அலுவலர் இராமையா, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் ராம்குமார் முன்னோடி இயற்கை விவசாயிகள் வெங்கடேசன் பெருமாள் சிவானந்தம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைத்து விவசாயிகளுக்கும் விதைகள் வேளாண் துறை சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.