திருப்பத்தூரில் 26 லட்சம் மதிப்பில் ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மனுக்கு குபேர அலங்காரம் செய்து பக்தர்கள் வழிப்பாடு

திருப்பத்தூர் நகர் பகுதியில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி வீதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (10) குபேர அலங்கார விழா நடைப்பெற்றது, இதில் முத்துமாரியம்மனுக்கு 26 லட்சம் ரூபாயில் 10,20 50,100, என ரூபாய் நோட்டுகளை கொண்டு அம்மனுக்கு சிறப்பு குபேர அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, 108 தங்க நாணயங்கள் அர்ச்சனை ஸ்ரீ சோடஷா உச்சார பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைப்பெற்றது,

இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசித்து சென்றனர் மாவட்ட கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன். மற்றும் ரவிச்சந்திரன் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடத்தக்கது