தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 31 மணமகன் மணமகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்து
தேனி மாவட்டம் வீரபாண்டி கன்னீஸ்வரர் திருக்கோவில் மணமகன் மணமகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதியினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தினார்

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே. எஸ் சரவணகுமார் மாவட்ட அறங்காவல் குழு தலைவர்கள் ராசி.செந்தில் முருகன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி
உள் பட மாநில மாவட்ட ஒன்றிய நகர் பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் பொதுமக்கள் பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.
