
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 18வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கள் பகுதியில் ஏற்படும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் 18வது மாமன்ற உறப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் மற்றும் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் V.S.ராமகிருஷ்ணன் தனது சொந்த செலவில் 18 வது வட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளில் 38 சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை மாவட்டக் கழகச் செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்பில்,
கழக மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், 1 வது பகுதிக் கழகச் செயலாளர் கே.திலகர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கேமராக்களை துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி. எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், நான்காவது மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் SKP.கார்த்தி, சுதாகர், குமரவேல், வழக்கறிஞர் பிரிவு அரவிந்தன், நன்றி உரையாற்றியவர்கள் வட்ட செயலாளர்கள் மண்டி சம்பத், 18வது வட்ட இளைஞரணி மனோஜ் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதிக் கழக, வட்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
