கோவை சிவாணந்தபுரம் பகுதியில் உள்ள லிட்டில் லேம்ப்ஸ் நர்சரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இலவச கண், மற்றும் பற்களுக்கான இலவச பரிசோதனை முகாமில், கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்..

கோவை சிவானந்தபுரம் பகுதியில் லிட்டில் லேம்ப்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மண்டலம், அகில இந்திய சமாதான ஒருமைப்பாடு கழகம், தி ஐ பவுன்டேஷன், கொங்கு பல் மருத்துவமனை, மற்றும் லாட்ஜ் ஜீ.கே.தேவராஜீலு, பிஸியோ தெரபி டாக்டர் பாத்திமா ரிஹானா ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் கண் மற்றும் பல் சிகிச்சை முகாமில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி, அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழக செயலாளர் சையது இப்ராஹிம், கோவை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இம்முகாமுனை துவக்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான கண் அறுவை சிகிச்சை, விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை, விழித்திரை நோய்க்கான அறுவை சிகிச்சைகளும், பல் சம்பந்தபட்ட அனைத்து பல் சார்ந்த பரிசோதனைகளும் நடத்த பட்டு அவர்களுக்கான மருத்துவ உதவிகளும், கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளும் வழங்க பட்டது. இந்த முகாமில் இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் குட்டி என்கிற செந்தில்குமார், மருத்துவர்

விமல் பிரசாத், திமுக சார்பாக சிவா என்கிற பழனிச்சாமி, கார்த்திக், சுரேஷ், குமரவேலு, ஹரி கிருஷ்ணன், வடக்கு மண்டலம் யாஸ்மின் சேட், ஊழியர்கள் சங்க தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.