
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் ஊராட்சி அங்கநாத வலசை கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் (2024-2025) ரூ.26,50,000 மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயகூட கட்டிடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறை முகங்கள் அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி சமுதாயக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றி
துவக்கி வைத்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
உடன் இந்த நிகழ்ச்சியின் போது
சட்டமன்ற உறுப்பினர்கள் அ.நல்லதம்பி,க.தேவராஜ் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ்., முருகேசன். குணசேகரன். கண்டுபிடி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன். ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா வினோத்குமார், மாவட்ட நெசவாளர் அணி தசரதன். ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
