கோவையில் வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் 59 -வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 23 -வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம்

கோவை, மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
கோவை மாநகராட்சியும், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கமும் இணைந்து, சமீபத்தில் சர்வதேச தரத்திலான புதிய செமி-உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளது. இந்த ஆண்டிற்கான போட்டிகள், மே 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. அப்பொழுது.. தமிழ்நாடு கூடைப்பந்து கழக துணைத் தலைவரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ், துணைத் தலைவர்கள் ஆனந்த், அசோக், பழனிச்சாமி, நவரத்தன் குமார் பாப்னா, சித்தார்த், மொஹம்மது இஷாக், செயலாளர் பாலாஜி, துணை செயலாளர் தீபாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்துடன், கோவை மாநகராட்சி இணைந்து, சர்வதேச தரத்திலான செமி உள்விளையாட்டு அரங்கத்தை அமைத்துள்ளது. அதில் ஆண்களுக்கான போட்டியில் நாட்டின் முன்னணி 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கான போட்டிகளிலும், 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசும் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையும், இரண்டாம் இடம் – ரூ.50,000 ரொக்கப் பரிசும் மற்றும் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பையும் மற்றும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும் வழங்கப்படும்
பெண்கள் பிரிவில் வெற்றியாளருக்கு ரூ.75,000 ரொக்கப் பரிசும் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும், இரண்டாம் இடம் – ரூ.50,000 ரொக்கப் பரிசும் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும் மற்றும் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும் என தெரிவித்தார்.