
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயல்பட்டு வருகின்து. இதன் மாநில தலைவராக வழக்கறிஞர் சக்தி வேல் இருந்து வருகின்றார். இவரது தலைமையில்
கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு இக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது..
தமிழக வெற்றி கழகம் பதவியேற்று 12 நாட்களுக்குள் சூலூரில் 10 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்ய பட்டு படுகொலை செய்யபட்டுள்ளது பெரும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர், இந்த விஷயத்தில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை வேறு மாவட்டங்களில் இது மாதிரியான தவறுகளை செய்ய, குற்றவாளிகளை தடுக்கும் வகையில் அமைய வேண்டும். அத்தகைய தண்டனையை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த செவிலியர் சீதா லட்சுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்வதாகவும், கோவை கோவில் மேடு பகுதியில் பேருந்து நிலையம் அருகே 100 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் பாரை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த கடைக்கு அருகே ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது இந்த கடையால் பல்வேறு நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகின்றது எனவே இந்த கடையை உடனடியாக அரசு மூடி, இடமாற்றம் செய்து பொதுமக்கள், மற்றும் மருத்துவமனை நோயாளிகளை காக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி கோவில் மேடு பகுதியில், இந்த கடைக்கு எதிராக பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்த படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
