
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசா யோகா மைய தன்னார்வலர்களான, ரவீந்திரன், மற்றும் சரவணன் கூறியதாவது..
ஈசா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும், ஆன்மீக மரபில் மாசி மாசத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே மனிதர்களின் உயிர்சக்தி, மேல் நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் உள்ளது. இந்த ஆன்மீக சாத்தியத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நமது கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மகா சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் விழித்து, இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக ஈஷா யோகா மையத்தில் 32 வது மகாசிவராத்திரி கொண்டாட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும், 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை இந்த கொண்டாட்டம் நடைபெறும் எனவும், இந்த நாளில் ஆதியோகி முன்பு சத்குருவுடன் நடைபெறும் நிகழ்ச்சிகள், சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உற்ச்சாடனைகள், யோகேஸ்வர லிங்கமஹா அபிஷேகம், மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெறுவதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று முதன்முறையாக சத்குரு, ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் எனும் ஆன்மீக செயல்முறை நடைபெறுவதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
