பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் மூன்றாயிரம் ரூபாய் பென்னாகரம் மத்திய ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் வழங்கினார்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளான நாகனூர், பருவதனா அள்ளி, முள்ளுவாடி போச்சாரம்பட்டி, ராஜாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 பணம் பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் வழங்கி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த அனைத்து பயனாளிகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார். இந்த நிகழ்வில் பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், முன்னாள் தலைவர் அன்பழகன், பணிக்குழு தர்மன், மாணவர் அணி அருள், ஒன்றிய அயலக அணி துணை அமைப்பாளர் காவேரி அப்பன் மற்றும் மாதையன், ராஜ்குமார், சேகர் என கட்சி நிர்வாகிகள் யாரால மலர் கலந்து கொண்டனர்.