
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுக்க புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடியும் இஷ்டதெய்வ ஆலயங்களுக்கு சென்று வழிபாடுசெய்தும் ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்து நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே ஒகேனக்கலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்து வருகின்றனர்.
இவர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மூலம் நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி ஏராளமான பொதுமக்கள் திதி கொடுத்தும், பித்ரு தர்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 18000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அதிக அளவில் மக்கள் கூட்டம் வரும் என்பதால் ஒகேனக்கல் காவல்துறை ம பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
