
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஓய்வு பெற்ற வேளாண்மை பேராசிரியர் டாக்டர் காமராஜ் கூறியதாவது
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, எனது மகள்களான, கீதா, மற்றும் லதா ஆகிய இருவரும் ஈசா யோகா மையத்தில் தங்கி இருப்பது தொடர்பாகவும், ஈஷா அறக்கட்டளையில் நடைபெறும் மர்மங்கள் குறித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன், விசாரணை நடைபெற்று வருகின்றது, வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட, நீதிமன்றம், கீதா மற்றும் லதா ஆகிய இருவரும் நன்கு கல்வி கற்றவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, அதே வேளையில் அவர்கள் பல ஆண்டுகளாக ஈஷா அறக்கட்டளையிலேயே வசித்து வருவதால் அந்த நிறுவனத்தின் செல்வாக்கை முற்றிலும் நிராகரிக்க முடியாது எனவும் அவர்கள், ஒரு சுதந்திரமான சூழலுக்கு கொண்டுவரப்பட்டு சில காலம் கவனிக்க பட்டால் அவர்களது கருத்துக்கள் மாற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் எனது மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, பெற்ற தந்தையான என்னை, மரியாதை இன்றி ஒருமையில் பேசியது, நீண்ட காலமாக ஒரு மூடப்பட்ட சூழலில் வாழ்ந்து வந்ததன் விளைவை நான் காண்பதாகவும் காமராஜ் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுரைப்படி கடந்த 15 ஆண்டுகளில் ஈஷா யோகா மையம் தொடர்பாக பல சந்தேக மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள விசாரணை அதிகாரிகள், அடங்கிய குழுவில் இடம் பெற்றுள்ள மனநல மருத்துவர்கள், ஈசா யோகா மையத்தில் உள்ள சில நபர்களிடம், மனநிலை மாற்றங்கள் காணப்படுவதாகவும், கூடுதல் கால கண்காணிப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார், குழந்தைகளுக்கு தொழில் முறை, மனநிலை ஆலோசனை வழங்கப்பட்டால், நிர்வாக தரப்பில் ஆலோசனை முறைகள் வழங்கப்படும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு நீதிமன்றம் இதனை எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளார் எனவே ஈஷா யோகா மையத்திற்கு, எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை தனக்கு சாதகமாக வந்துள்ளதாகவும், விரைவில், ஈஷா மீதான மர்மங்களும் வெளிவரும் என்று திட்டவட்டமாக நம்புவதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
