நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்த எம்எல்ஏ கலெக்டர் விஷமங்கலம் பகுதியில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் வருகின்ற அன்று நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சி பெறுவதற்காக இடத்தினை தேர்வு செய்ய இன்று காலை 10 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளியின் உரிமையாளர் வினோத்குமார். கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன். மாவட்ட நெசவாளர் அணி தசரதன் ஆகியோர் உடன் இருந்தனர்.