கோவை சாய்பாபா கோவில், டாக்டர் அம்பேத்கர் வீதியில்பிரியங்கா காந்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பின் சார்பாக, பெருந்தலைவர் காமராஜரின், 124வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டபட்டது.

கோவை சாய்பாபா கோவில், அடுத்த பெரியார் நகர், டாக்டர் அம்பேத்கர் வீதியில்
பிரியங்கா காந்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்தநாள் விழா கொண்டாட்டபட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க
சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா பழனிச்சாமி, தலைமை தாங்கினார். அமைப்பின் மாவட்ட செயலாளர் பட்டீஸ்வரன், முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் கோவை செல்வம், அமைப்பின் கொடியினை ஏற்றி வைந்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கபட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில செயலாளர் தெளலத் கான், ஐஎன்டியுசி கவுன்சிலிங் தலைவர் ஆறுச்சாமி, வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம், ஆகியோர் வழக்கறிஞர் குமாஸ்தாகள் ரம்யா, திவ்யா, செல்வராஜ், லட்சுமி, கலைமகள் அகாடமி இயக்குநர் மகேஷ்வரன், நரசிம்மநாயக்கன்பாளையம் லிவிங்ஸ்டன், மாரி முத்து, சாய்பாபா காலனி சர்க்கிள் சரவணக்குமார், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பாஷா, மாரிராஜ், நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.