திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜம்மணப்புதூர் பகுதியில் எழுது விடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது
இந்த எழுது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏதேனும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின
மேலும் குறைந்த நொடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 100001 ரூபாயும் இரண்டாவது பரிசாக 75001 ரூபாயும், மூன்றாவது பரிசாக 50001 ரூபாய் என மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எனது விடும் திருவிழாவை கண்டு களித்தனர்
மேலும் மேலும் திருவிழாவில் கலந்து கொண்ட எட்டு பேருக்கு லேசான காயங்கள் மற்றும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது
மேலும் இந்த எருது விடும் திருவிழாவில் இரண்டு டிஎஸ்பி நான்கு இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 130 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
