ராயக்கோட்டை,நவ.27-
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் அரியப்பன்,மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன்,நகர செயலாளர் நாகராஜ், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயராமன், சுரேஷ் , ஊராட்சி தலைவர் கஞ்சப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து.கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். நகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், திமுக வினர் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
ராயக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..
